Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

தமிழகத்தை உலுக்கிய சாதி ஆணவக் கொலைகள்



2016ம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த உடுமலை சங்கர் படுகொலை தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியது.சாதி ஆணவப் படுகொலைகள், கொலை மிரட்டல்கள் 2016ம் ஆண்டு அதிகம் அரங்கேறின. தருமபுரி இளவரசன், சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் வரிசையில் சாதி ஆணவப் படுகொலைக்கு ஆளான உடுமலைப் பேட்டை சங்கர் இப்போது பலராலும் மறக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சங்கர் கொலையைத் தொடர்ந்து அவரது மனைவி கவுசல்யாவின் தற்கொலை முயற்சி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தியாவில் வருடத்துக்கு 1000 பேர் சாதி ஆணவத்திற்கு பலியாவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக 81 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 105 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.2016 மார்ச் 13 அன்று பட்டப் பகலில் உடுமலைப் பேட்டை பஸ்நிலையம் எதிரில் சங்கர் படுகொலை நடந்தது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிவேல் மகன் சந்தோஷ், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த தேசிகன் என்பவரின் மகள் சுமதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்துக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சந்தோசின் பெற்றோர் அவருடைய காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி, 2016 ஜூன் மாதம் திருச்செங்கோட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். சந்தோஷ் திருச்செங்கோடு சென்றிருந்த போது, சுமதி படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் தனது மகன் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் சுமதியை கொலை செய்ததாக சந்தோஷின் பெற்றோர் கூறியது அதிர்வலைகளை உருவாக்கியது.
திண்டுக்கல் நத்தம் அய்யனார்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசீலன் இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சுண்டமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெனிபா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஜெனிபாவின் பெரியப்பா மகன் , காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெபசீலனை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்தார். இது நடந்தது 2016 அக்டோபரில்.நாமக்கல் அருகேயுள்ள வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரின் இரண்டாவது மகளான 16 வயதே ஆன ஐஸ்வர்யா என்பவருக்கும், சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முயற்சி செய்து வந்துள்ளனர். இந்த திருமணத்திற்கு ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவிக்கவே, ஐஸ்வர்யாவை கொலை செய்து எரித்து விட்டனர். இப்போது பெற்றோர் சிறையில் காலம் தள்ளுகின்றனர். இது டிசம்பரில்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.