Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 3, 2017

எவரையும் தாழ்த்த நினைப்பவர் தாழ்ந்து போவார்



சிலர் மானம் பற்றி அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். சற்று அவர்களைப் பற்றி அவதானித்தால் அவர்களிடம் ஒன்றுமே இருப்பதாகத் தெரியாது. 
எந்தவொரு நல்லவருமே தன்னைப் பற்றி சுயபிரகடனம் செய்வதில்லை. அவரது நல்ல சேவைகளே அவருக்குரிய கீர்த்திகளை ஈட்டித்தரும். 
இன்று கௌரவம் பற்றிப் பேசுபவர்கள் பேசுவதற்கு ஒன்றும் இல்லாது விடின் தான் உயர்குடியில் பிறந்தவன் என்று பெருமையும் சொல்லிக் கொள்வார்கள்.
இவர்கள் விரும்பி ஒரு பிறப்பை எடுக்க முடியாது. எனவே, சபை நடுவே தாங்கள் ஆற்றிய சேவைகள், பிறருக்குச் செய்த உதவிகளைச் சொல்ல இயலாது தங்கள் குலப்பெருமையை மட்டும் சொல்வது நியாயமா?
தவறான செயலைச் செய்துவிட்டு அதை மறைக்க அர்த்தமற்ற கற்பனையுடனான விதண்டா வாதங்களை, சாதிப்பெருமைகளை முன்வைப்பது மானம் கெட்ட செயல்தான்.
இந்த உலகம் பெரியது. அதனை விடப் பெரியதாக எமது எண்ணங்களை விரித்து வைப்போம். எவரையும் தாழ்த்த நினைப்பவர் தாழ்ந்து போவார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.