Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

வீடியோ வெளியிட்ட வீரரை காணவில்லை: மனைவி அச்சம் !


எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் மீது ஊழல் புகார் சுமத்திய வீரரை ‌தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எல்லையில் நாள்தோறும் 11 மணி நேரம் தொடர்ச்சியாக‌ பணிபுரியும் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை.. பல நாட்கள் வெறும் வயிற்றுடன் தூங்க வேண்டியுள்ளது என்று புகார் கூறி தேஜ் பகதூர் என்ற வீரர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பொதுமக்களிடையே வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக, ஊடகங்களில் நேற்று செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பலமுறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள தேஜ் பகதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் குடிகாரர் என்றும் எல்லை பாதுகாப்புப் படை விளக்கம் அளித்தது. அதனை தேஜ் பகதூரின் குடும்பம் மறுத்துள்ளது.

தேஜ்பகதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறும் எல்லைப் பாதுகாப்புப் படை, அவரை எல்லையில் பணிபுரிய அனுப்பி வைத்தது ஏன்? என்று அவரது மனைவி ஷர்மிளா கேள்வி எழுப்பியுள்ளார். உயர் அதிகாரிகளின் ஊழலை வெளிப்படுத்திய தமது கணவரை நேற்று பிற்பகல் முதலே தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிய ஷர்மிளா, தேஜ்பகதூருக்கு நீதி கிடைக்க, இதுதொடர்பாக உரிய விசாரணை ‌நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் குண்டு வீச்சில் இறந்தார் என்று செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் பிஜேபி பக்தர்கள் இருக்கும் வரை... இது தொடரும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.