Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 22, 2017

திண்டுக்கல்லில் கரைவேட்டிகள், போலீஸ் அதிகாரிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய மக்கள்


நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மக்கள் விரட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழக அரசு வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஊருக்கு வரும் சாலைகளில் குழியை தோண்டி வைத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அங்கு வராதபடி பார்த்துக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இது குறித்து அறிந்த கோவில்பட்டி கிராம மக்கள் வாடிவாசலை மறித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
மக்களோ அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத அதிமுகவினர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.