Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

ஜல்லிக்கட்டு இல்லை, பொங்கலுக்கு விடுமுறை ரத்து, அடுத்து அதுவா?: அழகிரி மருமகள் கொந்தளிப்பு



சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை ரத்தை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மருமகள் அனுஷா ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிக்கை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் மாற்றாந்தாய் நடவடிக்கையை கண்டித்து நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க
அழகிரியின் மருமகள் அனுஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜல்லிக்கட்டு கிடையாது... இனி பொங்கலுக்கு விடுமுறை இல்லை...அடுத்ததாக தமிழக கல்வி முறையில் தமிழ் இரண்டாம் மொழியாக இருக்கக் கூடாது என்பார்களா? என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.