January 26, 2017
நாகரிக வாழ்வின் புதிய அடையாளமான டீ பேக்குகள் ஏற்படுத்தும் தீமைகள்.
தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.
இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டி போட்டு விற்கின்றனர்.
இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் இதோ.
"டீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) தெரிவித்துள்ளது.
இந்த வேதிப்பொருள் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது.
இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது.
மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல் பருமன், இதய நோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்சனைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது
சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது.
இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீ பேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் உண்டாகிறது.
இத்தனை உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது.
நாகரிக வாழ்வின் புதிய அடையாளமான டீ பேக்குகள் ஏற்படுத்தும் தீமைகள்.
Reviewed by மறத்தமிழன்
on
January 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.