Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 16, 2017

அலங்காநல்லூரில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை தடுக்க போலீசார் குவிப்பு



ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி தடையை மீறி நடத்தப்படுமா என்கிற பரபரப்பு எழுந்துள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப்போட்டி உலகப் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் முடிந்து மூன்றாவது நாளில் அங்கு நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப்போட்டியைக் காண வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை இருப்பதால் அலங்காநல்லூரில் இன்று என்ன நடக்கப்போகிறது என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு முதல்நாள் வாடி வாசல் பகுதியில் காளைகளுக்கு பூஜை நடத்தப்படும். நேற்றும் அவ்வாறு பூஜை நடத்தப்பட்டது ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஆயத்தமாக கருதப்படுகிறது.
எனவே இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறப்படுவதால் போட்டி நடத்தப்படாமல் தடுப்பதற்காக அலங்காநல்லூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேற்று அலங்காநல்லுர் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். இதற்கிடையே நேற்று காளை பூஜை முடிந்ததும் ஊர்வலமாகச் சென்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி முழக்கமிட்டனர். பீட்டா அமைப்புக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர்.
வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு எதிரான தடைக்கு அதிருப்தி தெரிவித்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.