Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

திருமணம் செய்துவைத்ததற்காக கர்ப்பிணியை கொன்ற இருவருக்கு மரணதண்டனை



நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த கர்ப்பிணி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்து. நெல்லை வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த விஸ்வநாதன், காவேரி ஆகியோர் கடந்த ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஸ்வநாதனின் சகோதரி கல்பனா உதவியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காவேரியின் பெற்றோர் கல்பனாவை கடந்த ஆண்டு மே மாதம் 13-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கல்பனாவை படுகொலை செய்த காவேரியின் பெற்றோர் சங்கரநாராயணன், செல்லம்மாள் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.