Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

காந்திக்கு ஒரு கோட்சே! ஜெயாவிற்கு யார்? வெளிவரும் மர்ம முடிச்சுக்கள்….



காந்திக்கு ஒரு கோட்சே! இயேசுவிற்கு ஒரு யூதாஸ்! ஜெயாவிற்கு யார்? சசிகலாவா? மோடியா? இல்லை மறைந்திருக்கும் அந்த மர்ம நபர் யார்? என்பதே தற்போதைய தமிழ்மக்களின் கேள்வியாக இருக்கின்றது.
இலங்கையில் பிரபாகரன் மரணத்தில் எழுந்த சர்ச்சைகள் போல ஜெயாவின் மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுப்பட்டன. தற்போது எழுப்பட்ட சந்தேகம் போலவே அரசியலில் நகர்த்தப்படும் சில சம்பவங்களும் சந்தேகங்களை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக சீ.ஐ.ஏ உலகத் தலைவர்களுள் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று போட்டிருக்கிறது. அரசியல்வாதிகள், ஜனநயகவாதிகள், தேசியவாதிகள், கம்யூனிஸ்டுக்கள், ஏகாதிபத்திய எதிர்பாளர்கள் என அமெரிக்க ஏகபோக அரசின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பலியானவர்கள் பலர்.
முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் அமெரிக்காவின் எல்லைக்குள்ளேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜோன் எப். கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் உட்பட அமெரிக்க உளவுத்துறை கொலை செய்தவர்கள் பலர்.
அமெரிக்காவில் உச்ச அதிகாரத்திலிருக்கும் முதலாளிகளின் கட்டளைக்குக் கீழேயே பெரும்பாலான கொலைகள் நடந்தேறியுள்ளன.
பிரித்தானியாவில் அண்மைக்காலக் கொலைகளுள், டேவிட் கெலி என்ற அரசியல்வாதியை அந்த நாட்டின் உளவுத்துறையான எம்.ஐ.5 கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் ஆங்காங்கு வெளியாக விவாதங்களின் பின்னர் நிறுத்தப்பட்டன.
இந்தியாவில் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் உளவுத்துறை செயற்பட்டதற்கான ஆதாரங்கள் சில வெளியாகியிருந்தன.
அதன் பின்னர் ஜெயலலிதாவின் மரணம் கொலை என்பதற்கான மர்மம் நிறைந்த பல ஆதாரங்கள் வெளியாகின்றன. ஆதாரங்களை முன்வைத்துக் கேள்வி கேட்பவர்கள் மிரட்டப்படுகின்றனர்.
பிரித்தானியாவில் அண்மைக்காலக் கொலைகளுள், டேவிட் கெலி என்ற அரசியல்வாதியை அந்த நாட்டின் உளவுத்துறையான எம்.ஐ.5 கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் ஆங்காங்கு வெளியாக விவாதங்களின் பின்னர் நிறுத்தப்பட்டன.
ஜெயலலிதாவின் மர்மம் நிறைந்த வாழ்க்கையும், ஆட்சியும் அதிகாரமும் அவரே தேடி இணைத்துக்கொண்ட சசிகலா போன்ற மாபியாக்களின் இணைந்திருந்தது.
தமிழகத்தில் பேரம் பேசும் வலிமையுள்ள அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா மாற்றமடைவதற்கு அங்குள்ள இரண்டு பெரும் கட்சிகளில் ஒன்றை அழிப்பது தேவையானதாக இருந்தது.
தன்னைச் சுற்றியுள்ள உறவுகளை வெறும் காசு பணம் மற்றும் நுகர்வு சார்ந்த ஒன்றாகவே கருதிய ஜெயலலிதா, தன்னைச் சுற்றி உருவாக்கிய மாபியாக் கும்பல் இந்துத்துவ பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவது கருத்தில் கொள்ளப்படவேண்டியது.
ஜெயலலிதா போன்றவர்களைக் கொன்று போட்டுவிட்டு அதனை மக்களிடமிருந்து மறைப்பது இத்தனை இலகுவானது என்றால், சாமனியர்களின் நிலை?
நவ காலனீயத்திலிருந்து அரசியல் கொலைகளையும் இந்திய அதிகாரவர்க்கம் செவ்வனே உள்வாங்கி வைத்திருக்கிறது.
ஜெயலலிதா உடல் சுகவீனம் காரணமாக படுத்த வேளையில் தற்காலிகமாக ஏனையவர்கள் சிலருக்கு கிடைக்கபெற்ற சுகபோக வாழ்க்கை நிரந்தரமாக கிடைக்கதா என யோசித்த சிலர் ஜெயாவினை நிரந்தர தூக்கத்தில் படுக்க வைத்துவிட்டனர் என்பதே தற்போதைய சந்தேகமாக இருக்கின்றது.
சுவாதி கொலை வழக்கில் பல நாட்களை எடுத்துக்கொண்டு மர்மமாக முடிந்த வழக்குப்போல முதலமைச்சரின் மரணமும் முடியாமல் இருக்க தமிழ்மக்கள் வழித்துக்கொள்வதே பொருத்தமானதாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.