ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர் வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர்களிடம் பேசும் போது, ” இந்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளதை பார்ப்பதற்காகத் தான் இங்கு வந்தேன்.
உண்மையான ஹீரோக்களை பார்க்கத் தான் இங்கு வந்தேன். என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய 42 பேரை கைது செய்து வாடிப்பட்டியில் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்த போராட்டம் அமைதியான முறையிலேயே தொடர வேண்டும். எவ்வளவு சத்தங்களை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் காது கொடுத்து கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்.
அந்த மாணவர்கள் மண்டபத்தில் இருந்து வெளியே வர வேண்டும். இதுபோன்று ஒரு பெரும் போராட்டம் நடைபெறுவது மிகுந்த அரிதான ஒன்று.
அதனால் இந்த போராட்டம் கலைந்து விடக் கூடாது. நோக்கத்தை அடையும் வரை கலைந்து விடக் கூடாது.” இவ்வாறு தெரிவித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.