Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 22, 2017

போலீஸ் அடாவடி.. புதுக்கோட்டையில்! ஜல்லிக்கட்டு போராட்ட பந்தல் அகற்றம்.. மின்சாரம் துண்டிப்பு..


புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று வரும் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டம் நடைபெறும் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும், இதனை நம்ப மக்கள் மறுத்து வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டுத் தொடர்பாக நிரந்தர சட்டம் வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

 புதுக்கோட்டையில் இன்று நிரந்தர சட்டம் கேட்டு போராட்டம் நடத்தி வரும் மக்கள் அமர்ந்திருக்கும் போராட்டப் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதே போன்று, ராஜபாளையத்திலும், மக்கள் போராட்டம் நடத்தும் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். ஆனாலும், போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.