January 4, 2017
கோபாலபுரத்தில் விடிய விடிய நடந்த அடிதடி : ராசாத்தியம்மாள் சாமியாடினார்?!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் இல்லாத முதல் திமுக பொதுக் குழு இன்று நடந்தது.
பேராசிரியர் அன்பழகன், தளபதியை செயல் தலைவராக அறிவித்து விட்டார். தளபதி வாழ்நாள் எல்லாம் எதை எதிர் பார்த்தாரோ அது கிடைத்தது.
ஆனால், பொதுக்குழுவை நேரில் பார்த்த கட்சி நிர்வாகிகள் தளபதி முகத்தில் உற்சாகமோ, சந்தோஷமோ இல்லை என்கிறார்கள்.
முகத்தில் துளி சந்தோஷம் இல்லை. இரவில் தளபதி வீட்டில் தலைவர் முன்னிலையில் பயங்கர ரகளை நடந்து முடிந்திருகிறது.
குறிப்பாக கனிமொழியின் தாயார் ருத்திர தாண்டவம் ஆடி விட்டார் என்கிறார்கள். தளபதி இதை எதிர்பார்த்தே தன்னுடன் வேலுவையும், ராசாவையும் வைத்துக் கொண்டார்.
அவர்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது என்கிறார்கள். தளபதிக்கு மட்டுமே மூன்று பதவிகளா? பொருளாளர் பதவி கனிமொழிக்கு வேண்டும் என்று சாமியாட்டம் போட்டார்.
ஆனால், தளபதி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை என்கிறார்கள். கட்சியை குடும்பச் சொத்தாக்கிட அனுமதிக்கவே மாட்டேன் உங்களால் இயன்றதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உறுதியாகக் கூறி விட்டார்.
அதன் பின்தான் இரவு முழுவதும் சண்டை என்கிறார்கள். தளபதியின் நோக்கம் அபாராமானது.
முழுக்க அவர் செயல்பட அனுமதித்தால் மிக விரைவில் திமுக ஆட்சி பீடம் என்பது தான் பரவலான கருத்து.
கோபாலபுரத்தில் விடிய விடிய நடந்த அடிதடி : ராசாத்தியம்மாள் சாமியாடினார்?!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.