டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை; இங்கிலாந்தின் ராணுவ விசாரணையிலே அவர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் என புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளது.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என கூறப்படுகிறது. ஆனாலும் நேதாஜியின் மரணம் தொடர்பாக மர்மம் நீடித்து வருகிறது.
1945-ம் ஆண்டுக்குப் பின்னரும் நேதாஜி உயிருடன் இருந்தார்; மேற்கு வங்கத்துக்கு வந்து சென்றார் என்பதற்கான ஆவணங்களை மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டிருந்தது. மத்திய அரசும் இதேபோல் நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பக்ஷி 'Bose: The Indian Samurai - Netaji and the INA Military Assessment' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் குண்டுவீச்சில் தப்பிய நேதாஜி சைபீரியாவில் முகாம் அமைத்தர். அங்கு 3 வானொலி நிலையங்களையும் நேதாஜி அமைச்சர்.
இதை இங்கிலாந்து ராணுவம் அறிந்து கொண்டது. ரஷ்யாவின் உதவியுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போதுதான் நேதாஜி கொல்லப்பட்டார்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.