Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 13, 2017

போராட வருமாறு இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!


கருப்பு பணத்திற்கு எதிராகப் போராட வருமாறு இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மையத்தில் 21-வது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கிவைத்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, ரொக்கப் பணம் இல்லாத பணப் பரிமாற்றத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்வதற்கு, இளைய தலைமுறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இதே போல் ஹரியானா மாநிலம் ரோஹடக்கில் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் உரையாற்றிய மோடி, 35 வயதுக்குட்பட்ட 80 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சமூக மாறுதலுக்கு உடனடியாக பங்காற்ற முடியும் என்றும் கூறினார். சாதிமத வேறுபாடுகள், கருப்பு பணம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராட வருமாறு இளைஞர்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.