அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் கிழித்தும், சேதப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், 'இவ்வாறு ஃபிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்துபவர்களை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்கள் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நிலவுகிறது. பல இடங்களில் சசிகலா படங்களை சேதப்படுத்தியும், கிழித்தெறிந்தும் தங்களது எதிர்ப்புகளை மக்கள் காட்டி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு கணிசமான அளவு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. கடையநல்லூர், தென்காசி. சங்கரன்கோவில், திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பல இடங்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஃபிளக்ஸ் பேனர்களை வைத்துள்ள அ.தி.மு.க.வினர், சசிகலாவின் பேனர்கள், போஸ்டர்களை கிழித்தெறிந்து வருகின்றனர். பல இடங்களில் சசிகலாவின் படம் கிழிக்கப்பட்டும், தார் ஊற்றியும், சாணத்தை பூசியும் சேதப்படுத்தி வருகிறார்கள். இது சசிகலா ஆதரவாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தார் ஊற்றியும், சாணத்தை பூசியும் சேதப்படுத்தப்பட்ட பேனர்களை கழுவியும், கிழிக்கப்பட்ட பேனர்களை உடனடியாக மாற்றியும் வருகிறார்கள்.

காவல்துறையில் வாய்மொழியாக புகார் அளிக்கப்பட்டபோதும், பெரும்பாலான இடங்களில் இவ்வாறு நடப்பதால் யார் செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை. தீவிரமாக கண்காணித்தும் யார் இப்படிச் செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாததால் சசிகலா ஆதரவாளர்கள் தவித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குழுவிலும் இதை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் விவாதித்து வந்தனர். இந்த குழுவின் அட்மினாக மாநகர மாவட்ட ஜெ பேரவைச் செயலாளரான கே.ஜே.சி.ஜெரால்ட் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அந்த வாட்ஸ் குருப்பில் இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளரான பல்சசிகலா வாட்ஸப் பேனர்லிக்கோட்டை செல்லத்துரை என்பவர், 'சின்னம்மா படத்தை சேதப்படுத்துபவர்களை கண்டறிபவர்களுக்கு 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்' என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அம்மாவின் நல்லாசியோடு சின்னம்மா கழகப் பொதுச்செயலாளராக தலைமையேற்று நடத்தும் அ.தி.மு.க.வின் ஆற்றல் மிக்க தொண்டர்களே..’ என்று தொடங்கும் அந்த அறிவிப்பில், ‘‘நமது கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சூது மதியாளர்களின் சூழ்ச்சியால் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தில் மாற்றுக் கட்சியினரின் தூண்டுதலுடன் செயல்படும் வன்முறையாளர்களின் செயல்களைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது.
குறிப்பாக, நமது கட்சியினர் வைக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்துபவர்களை அடையாளப்படுத்தும் பணியினைச் செய்ய நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு சின்னம்மாவின் படங்களை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் பணியில் நாம் அனைவருமே இணைந்து செயல்படுவோம். இதற்காக இரவில் நாம் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட கட்சியினர் அனைவரும் முன்வர வேண்டும்.
அவ்வாறு அனைவரும் இரவு நேரங்களில் தீவிரமாக செயல்பட்டு கூடுதல் கண்காணிப்புடன் இருந்தால் போர்டுகளை சேதப்படுத்தும் நபர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடியும். நமது கட்சியின் ஃபிளக்ஸ் போர்டுகளை சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்,’’ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
சசிகலா படம் அச்சடிக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனர்களை கிழிப்பவர்களைக் கண்டுபிடித்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என்கிற இந்த அறிவிப்பு குறித்து கட்சியினர் பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.