ஒரு பக்கம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவே முதல்வராகவும் பதவியேற்க வெண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. மறுபுறம் சசிகலாவுக்கு எதிராக தீபாவை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டியும், 'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' எனும் பேரவையை துவக்கியும் பரபரப்பை கிளப்புகிறார்கள் அ.தி.மு.க.வினர்.
சேலத்தில் 'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' பொறுப்பாளர்கள் கூட்டம் சேலத்தில் இன்று நடந்தது. மாவட்டப் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக்கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளராக ராமச்சந்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை'யின் கொடியை அறிமுகப்படுத்தி பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், ‘‘அ.தி.மு.க., கட்சி கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்தினால் போலீஸ்காரங்க நம்மை அடிப்பாங்க. அதனால் நம்ம பேரவையை சேர்ந்தவர்கள் நம்ம கொடியை தான் பயன்படுத்த வேண்டும். பேரவை கொடி, மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தற்காலிகமானவர்களே. தீபா அம்மா வந்த பிறகு மாற்றங்கள் இருக்கும்.

இங்கு எதற்காக மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்கிறோம் என்றால் சமூக வலைதளங்களில் நம்ம கட்சிக்காரர்கள் யார் என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. அதை தவிர நம்ம அம்மாவை தவறாக சித்தரிக்கிறார்கள். அதை தடுப்பதற்கு தான் இந்த பொறுப்பாளர் நியமனம். நான் முதலில் சேலத்தில் உள்ள 60 டிவிசன்களிலும் ஆதரவாளர்களை திரட்டி தீபா அம்மாவை சந்திக்கலாம் என்று முடிவு செய்தேன்.
ஆனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் என்னை தொடர்பு கொண்டு கேட்டதன் அடிப்படையில் நான் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறேன். வரும் பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் தீபா அம்மாவை சந்தித்து 1 கோடி உறுப்பினர்கள் படிவத்தை கொடுத்து அவரை அரசியலுக்கு அழைத்துக் கொண்டு வருவோம். நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. அம்மாவின் உண்மையான வாரிசு தீபா. அதனால் ஜெயலலிதா வகித்து வந்த பதவியில் தீபாவை அமர வைத்து அழகு பார்ப்போம்’’ என்றார்.
அதன் பிறகு 21 மாவட்ட பொறுப்பாளர்களும் பேசினர். எல்லோரும் சசிகலாவையும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களையும் கடுமையாக விமர்சித்து பேசினார்கள். "அம்மாவிற்கு கால் செருப்பு துடைத்தது முதல் கார் துடைப்பது வரை 120 பணியாளர்கள் இருந்தாங்க. அவுங்க எல்லோருமா பதவிக்கு வர முடியும். யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற தகுதி, தராதரம் வேண்டாமா? இதற்கெல்லாம் முடிவு கட்டத்தான் 'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' தொடங்கி இருக்கிறோம்’’ என காட்டம் காட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.