முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (புதன்கிழமை) தலைமை செயலகத்தில் நடக்கிறது.
இரண்டாம் கூட்டம்
கடந்த டிசம்பர் 6–ந் தேதியன்று முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் அன்று பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையின் முதல் கூட்டம் டிசம்பர் 10–ந் தேதி காலையில் கூடியது. அந்த கூட்டத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடுகிறது. இன்று கூடும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விவசாயிகள் சாவு
தமிழகத்தில் மழை பொய்த்துப்போன சூழ்நிலையில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மேலும் காவிரி நீரும் கிடைக்கவில்லை. எனவே டெல்டா பகுதி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போதிய வேளாண்மை விளைச்சல் இல்லை.
அதோடு வாடிய பயிரைக் கண்டு அதிர்ச்சியில் விவசாயிகள் பலர் மரணமடைந்தனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். வறட்சியால் நடந்த விவசாயிகளின் சாவு எண்ணிக்கை 60–ஐ தாண்டுகிறது.
இன்று கூடும் அமைச்சரவையில் விவசாயிகள் மரணம் தொடர்பாகவும், மாநிலத்தில் நிலவும் வறட்சி பற்றியும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. வறட்சி தொடர்பாக மத்திய அரசிடம் நிவாரண நிதி கோருவது உள்பட பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
ஜல்லிக்கட்டு
மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிப்பதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக, இந்த அமைச்சரவை கூட்டத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் தொடங்கப்பட வேண்டும். அமைச்சரவை கூட்டத்தில் கவர்னர் உரை தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.