புதுடெல்லி,
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளநிலையில் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை நேபாளத்திற்கு எடுத்துச் சென்று உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜாகீர் நாயக்கின் இயக்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடைசெய்யப்பட்டு உள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஜாகீர் நாயக்கிற்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜாகீர் நாயக் தீவிரமைய நடவடிக்கைகளை நேபாளத்திற்கு எடுத்துச் செல்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாகீர் நாயக் ஆதரவாளர்கள் சமீபத்தில் காத்மண்டு, கிருஷ்ணாநகர் மற்றும் சிராகா மற்றும் பிர்காஞ் மாவட்டத்திற்கு சென்று உள்ளனர். அவர்கள் அவர்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் மற்றும் இஸ்லாமியம் குறித்து தவறான போதனைகளை வழங்கிஉள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் இதுபோன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். நேபாளத்தில் நடைபெற்ற தெருமுனை பிரசாரத்தின் போது தோராயமான ஆட்சேர்ப்பு நடைபெற்று உள்ளது. இளைஞர்களிடம் இருந்து மொபைல் எண்கள், வீட்டு முகவரிகள், இ-மெயில் முகவரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் போலியாகத் தயாரிக்கப்பட்ட இஸ்லாமிய போதனைகள் மற்றும் மூலைச் சலவையின் மூலமாக சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
நேபாளத்தில் தடைசெய்யப்பட்ட அல் பைய்யான் இஸ்லாமிக் மையம் மற்றும் இஸ்லாமிக் அமைதி ஆய்வு மையத்திற்கு ஜாகீர் நாயக் நிதிஉதவி வழங்கிஉள்ளார் என்றும் தெரியவந்து உள்ளது. இவை அனைத்தும் பாகிஸ்தானின் சார்கோதாவில் உள்ள சர்வதேச இஸ்லாமிய மையத்துடன் தொடர்புடையது, இவ்வியக்கங்கள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
பர்கத் ஹாஷ்மியின் சர்வதேச இஸ்லாமிய மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, ஹாஷ்மி கனடாவில் அல்-ஹுடா சர்வதேச இயக்கத்தை நடத்தி வருகிறார், இவ்வியக்கம் கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்கிறது.
வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த ஜூலை 1–ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசும் நடவடிக்கையை தொடங்கியது. இந்தியாவும் பிடியை இறுக்கியது, இதனால் ஜாகீர் நாயக் இந்தியாவிற்கு திரும்பவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.