Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

ரூ.46 லட்சத்துக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் விசாகப்பட்டினத்தில் ரூ.47 லட்சம் பறிமுதல் டாக்டர் உள்பட 3 பேர் கைது


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தி ரூ.47 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டாக்டர் ஆனி சிரீஷ் என்பவரையும் அவரது கூட்டாளிகளான எம்.சூரியபிரசாத் ரெட்டி, பி.சீனிவாச ராவ் ஆகியோரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.46 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும்.

இந்த தகவலை தெரிவித்த துணை போலீஸ் கமி‌ஷனர் சிட்டிபாபு, டாக்டர் ஆனி சிரீஷ் 30 சதவீதம் கமி‌ஷன் கொடுத்து ரூ.47 லட்சத்துக்கு, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார். இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.