பிரேசிலில் கிரேக்க தூதராக பணியாற்றியவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59), இவர் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் புறநகரான நோவா இருவாச்சு என்ற இடத்தில் தங்கியிருந்த போது திடீரென மாயமாகி விட்டார்.
அவரை பணத்துக்காக யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனவே அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒரு பாலத்துக்கு கீழ் காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடல் கரிக்கட்டையாக கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் கிரேக்க தூதர் கிரியகோஸ் அமிரிதிஸ் எரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து கொலையாளி யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதில் அவரை மனைவி பிரான்கோயிஸ் (40) கொலை செய்தது தெரிய வந்தது.
இவர் பிரேசிலை சேர்ந்தவர். இவர்களுக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள். இந்த நிலையில் பிரான் கோயிசுக்கும், பிரேசிலை சேர்ந்த போலீஸ் அதிகாரி செர்ஜியோ மொரைரா (29) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
அதற்கு இடையூறு ஆக கிரியகோஸ் அமிரிதிஸ் இருந்தார். எனவே மனைவி பிரான்கோயிஸ் தனது காதலர் செர்ஜியோவுடன் இணைந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.
பிரேசிலியாவில் உள்ள வீட்டில் வைத்து தூதர் கிரியகோஸ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு காரில் எடுத்து சென்று உடல் எரிக்கப்பட்டுள்ளது. வீட்டில் படிந்திருந்த ரத்தக் கறையை வைத்து இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கினர்.
இந்த வழக்கில் கிரியகோசின் மனைவி பிரான்கோயிஸ், கள்ளக்காதலன் செர்ஜியோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். செர்ஜியோவின் உறவினர் மகால் ஹாயஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் பிணத்தை அப்புறப்படுத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.