Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 4, 2017

பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும் மம்தா பாணர்ஜி ஆவேசம்


கொல்கத்தா,

ரோஸ் வேலி ஊழல் வழக்கில் தொடர்புடையதாக திரிணாமூல் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்த்யோபத்யாயை சிபிஐபோலீசார் கைது செய்தனர்.  சுதீப் பந்த்யோபத்யா கைதுக்கு அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  மம்தா பாணர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடியையும்,பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவையும் கைது செய்ய வேண்டும். இந்திய அரசியலை பிரதமரால் புரிந்து கொள்ள முடியாது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று நினைத்தால் அது அவர்களுடைய தவறு. எங்களுடைய போராட்டத்தை நாங்கள் கைவிட மாட்டோம். பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாது. மக்களின் குரலை அவரால் ஒடுக்க முடியாது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் சாலையில் இறங்கி போராட வேண்டும். மத்திய அரசுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஜனவரி 9-,10,11 தேதிகளில் கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு எதிரே போராட்டம் நடத்தப்படும். தற்போது அவசர சூழ்நிலை நிலவுகிறது. பல அரசியல் கட்சிகள் மத்திய அரசை விமர்சிக்க பயப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.