Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

இறுதிக்கட்ட நிலையில் நீண்ட தொலைவு ஏவுகணைகளின் தயாரிப்பு - வடகொரியா


வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் புத்தாண்டு செய்தியாக வெளியிட்டு உள்ள தகவலில் தடை செய்யப்பட்ட நீண்ட தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் தயாரிப்பு இறுதிக்கட்ட நிலையில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும், பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

2006–ம் ஆண்டு ஜனவரி மாதம் 9–ந் தேதி முதன் முதலாக அணுகுண்டு வெடித்து சோதித்த அந்த நாடு தொடர்ந்து 2009, 2013 ஆண்டுகளில் அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. நான்காவதாக கடந்த ஜனவரி மாதம் 6–ந் தேதி அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்தது. (இதுவும் அணுகுண்டு சோதனையாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது). செப்டம்பரிலும் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை வடகொரியா அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சோதனை புங்கியே–ரி என்ற இடத்தில் நிலத்துக்கு அடியில் நடத்தப்பட்டது, இதனால் நிலநடுக்கமும் உணரப்பட்டது.

வடகொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் வடகொரியா எதையும் கண்டு கொள்வது கிடையாது. வடகொரியாவின் பல்வேறு அதிரடி சோதனைகள் தோல்வியிலும் முடிந்து உள்ளது.

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் புத்தாண்டு செய்தியாக வெளியிட்டு உள்ள தகவலில் தடை செய்யப்பட்ட நீண்ட தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் தயாரிப்பு இறுதிக்கட்ட நிலையில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார் என்று தென் கொரியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. யான்கூப் செய்தி நிறுவனம் கிம் ஜாங் உன் உரையை கண்காணித்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு அவருடைய தந்தை உயிரிழந்த பின்னர் ஆட்சிக்கு வந்தவர்தான் கிம் ஜாங்-உன். வடகொரியாவில் இப்போது வரையில் தனக்கு எதிராக எழுதுபவர்களை கொன்று குவித்து வருகிறார்

 வடகொரியா இவ்வாண்டும் அதிகமான ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.