Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

ரோஹிங்யா சிறுபான்மையினர் தாக்கப்படும் வீடியோ காட்சிகள், விசாரிப்பதாக மியான்மர் அதிகாரிகள் தகவல்


மியான்மரில் ரோஹிங்யா சிறுபான்மையினர் கொடுமையான முறையில் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்படும் சம்பவம் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

ராஹினேவில் கடந்த நவம்பர் மாதம் இந்த கொடூரத் தாக்குதலானது சிறுபான்மையினர் மீது போலீசால் பிரயோகிக்கப்பட்டு உள்ளது, இதனை அங்கியிருந்த போலீஸ் அதிகாரி வீடியோ எடுத்து உள்ளார். ரோஹிங்காவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்கள் தொடர்ந்து கொடூரமான முறையில் தாக்கப்படும் சம்பவமானது தொடர்ந்து நடைபெறுவதாக உள்ளது. முன்னதாக அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் பாதுகாப்பு படையானது சட்டவிதிமுறைகளையே பின்பற்றுகிறதாக தெரிவிக்கப்பட்டது.

மியான்மரின் ரோஹிங்யா செய்தியாளர்கள் மற்றும் விசாரணையாளர்கள் எளிதான முறையில் பிரவேசிக்க முடியாத பகுதியாக உள்ளது, எனவே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை அடையாளம் காண்பது என்பது சிரமமானதாக உள்ளது.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள்

மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.

பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. ராஹினேவில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மத கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர். இப்போதும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மோசமான முகாம்களிலே வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும் பாகுபாடுடன் நடத்தப்படுகின்றனர். சிலர் அங்கிருந்து எப்படியாவது அகதியாக வேறுநாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
Image result for Myanmar-to-probe-Rohingya-beating-video


மவுங்டவ் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இரு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினை அடுத்து ரோஹிங்யா இஸ்லாமியர்கள் கிராம மக்கள் வரிசையாக இருக்க செய்யப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது. கொடூரமாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இதற்கிடையே சட்டவிதிமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஹினேவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுப்பதாக கூறிவரும் மியான்மர், சிறுபான்மையினர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்படும் சம்பவத்தை மறுக்கிறது.

மாறாத காட்சி

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

படுகொலை, சித்ரவதை, பாலியல் பலாத்காரம் என்று கடுமையான தாக்குதல்கள் மூலம் ரோஹிங்யா இஸ்லாமியர்களை அச்சுறுத்தி, அவர்களது வாழ்விடத்திலிருந்து விரட்டும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் வங்கதேசத்துக்குத் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி, மலேசியா, இந்தோனேசியா செல்ல ரோஹிங்யா இஸ்லாமியர்கள்  புலம் பெயர்ந்து ஆள் கடத்தல் கும்பலிடம் பணம் கொடுத்து மாட்டிக் கொள்ளும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து பிற நாடுகளில் வாழும் ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகளால் போராட்டம் நடத்தப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

மியான்மரில் மக்களாட்சி மலர போராடிய ஆங் சான் சூச்சியால் தங்களுக்கு விடிவு பிறக்கும் என்ற அவர்களுக்கு ராணுவத்தினால் இடி இறக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே உள்ளது.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது பாதுகாப்பு படையினரால் பிரயோகிக்கப்படும் வன்முறையை பவுத்த அதிகாரிகள் சிறிய பிரச்சனை என்று ஒதுக்கிவிடுவார்கள் என்பதில் எந்தஒரு ஐயமும் கிடையாது.

போர் எண்ணமானது அங்கு உயர்நிலைப் பெற்று உள்ளது. அங்கு சிறுபான்மையினர் மீது பிரயோகிக்கப்படும் அயோக்கியத்தனம் போர் குற்றமாக பார்க்கப்படுவது கிடையாது. இப்போது வெளியாகியாகியிருக்கும் தகவல்கள் அங்கு ராணுவம் பிரயோகிக்கும் கொடூரத் தாக்குதல்களை வெளிக்காட்டிஉள்ளது. இது ஒரு காட்சி மட்டும் கிடையாது, தொடர்ந்து தாங்கள் தாக்கப்பட்டு வருவதாக ஹோங்யா இஸ்லாமியர்கள் கூறிஉள்ளனர். ராணுவத்தினால் பாலியல் பலாத்காரம், கொள்ளை போன்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது என்றும் மக்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணை அதிகாரிகளோ, செய்தியாளர்களோ செல்ல முடியாத நிலையில் இதனையும் அந்நாட்டு அரசு பொய்யான செய்தி என புறந்தள்ளினாலும் ஐயம் கிடையாது என்பதே வெளிநாட்டு செய்தியாளர் கருத்தாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.