Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு


மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது குளச்சல் துறைமுக  பணிகள் மற்றும் பல்வேறு சாலைப்பணிகள் பற்றி பேசினார்கள்.

முன்னதாக இன்று காலை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்  நிருபர்களிடம்  கூறிய தாவது:-

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நாளை தி.மு.க.  போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில்  போராடு கிறார்கள். போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக்கட்டு  நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக இருப்போம்.  ஆனால் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.

தமிழ்நாடு  காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர், சுற்றுச்சூழல்  மற்றும் வனத்துறை அமைச்சகம் காளையை காட்சி பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சிதான் அதை செய்தது.

தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தின் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. தற்போதைய பா.ஜனதா அரசு ஜல்லிக்கட்டு நடத்த  முயற்சித்து வருகிறது.
செய்த தவறுக்காக காங் கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு  நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட வேண்டும். மோடி அரசு விவசாயிகளுக்கான நல்ல திட்டங்களை வகுத்து வருகிறது.
இவ்வாறு  அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.