Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 18, 2017

நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு மட்டும் ஏன் அனுமதி!



ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் அரசியல் தலைவர்களையும் சில நடிகர்களையும் போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. குறிப்பாக எந்த போராட்டமும் ஊடகங்களில் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதையே  மையமாக கொண்டிருக்கும்.
மாநிலம் தழுவிய போராட்டம் என்றால் கூட மாவட்டங்களில் சில இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் இளைஞர்கள் கூடுவர். ஊடகங்கள் முன்பு முழக்கங்கள் எழுப்புவர். பேட்டி கொடுப்பர். பின்னர் சிறிது நேரத்தில் கலைந்து செல்வர்.
ஆனால் முதன்முறையாக ஊடகங்களுக்கே அனுமதி அளிக்காமல் நடைபெற்ற போராட்டம் இதுவாகத் தான் இருக்கும். தந்தி தொலைக்காட்சி வாகனத்தை அலங்காநல்லூரில் விரட்டியடித்தனர்.
ஆனால் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு மட்டும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த பிரச்சனை தொடங்குவதற்கு முன்பு இருந்தே ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக முழுமையாக களமிறங்கியது நியூஸ் 7.
பிற தொலைக்காட்சி சேனல்கள் ஒரு செய்தியாகவே ஜல்லிகட்டு போராட்டத்தை பார்த்து வருகின்றனர். வேறு வழியின்றியே அந்த செய்தியை கவர் செய்வதற்காக களத்திற்கு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவானவர்கள் யார், தங்களது சுய நலனுக்காக போராட்டத்திற்கு வருபவர்கள் யார் என்பதை போராட்டக்காரர்கள் தெளிவாக உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.