January 4, 2017
வாரத்துக்கு ஒரு பெண், ரூ.7 லட்சம் பணம்! இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
காவல்துறையில் இருந்து ஏற்கனவே டிஸ்மிஸ் ஆகி பின்னர் பணியில் சேர்க்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஒருவரை காவல்துறை மீண்டும் சஸ்பெண்டு செய்திருக்கிறது.
அவரது பெயர் புகழ். திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தார்.
இன்ஸ்பெக்டர் புகழ், ஏற்கனவே வேலூர் மாவட்டம் வேப்பம்குப்பம் காவல் நிலையத்தில் எஸ். ஐ. ஆக பணியில் இருந்த போது, லஷ்மணன் என்கிற இன்பார்மரின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டார்.
இந்த வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மாநில மனித உரிமை ஆணையம் விசாரித்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் புகழ் காவல்துறையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு, அதனை தொடர்ந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பின்னர், அவர் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினால் மீண்டும் பணிகிடைத்தது.
கிடைத்த பணியை ஒழுங்காக செய்யாத புகழ் தன்னுடன் எஸ். ஐ. கணபதி என்பவரை கூட்டு சேர்த்துக்கொண்டு செம்மர குற்றவாளியிடம் 7 லட்சம் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.
அதுமட்டுமின்றி, வாரத்துக்கு ஒரு பெண்ணை சப்ளை செய்ய வேண்டும், அப்படி அனுப்பப்படும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்.
இதையெல்லாம் செய்யவில்லை என்றால் உங்க மீது கொலைவழக்கு பதிவு செய்யவா என மிரட்டியுள்ளார். பணம் கேட்பதே தப்பு, இதுல பெண்கள் சப்ளை வேறு கேட்குதா என்று வெறுப்படைந்தனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு 40 நாட்களுக்கு முன் ஆதாரங்களுடன் புகார் சென்றதும், ரகசியமாக விசாரணை நடந்தது. முடிவில் இன்ஸ்பெக்டர் புகழ், எஸ்.ஐ.கணபதி ஆகிய இருவரும் முதற்கட்டமாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
வாரத்துக்கு ஒரு பெண், ரூ.7 லட்சம் பணம்! இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.