Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 7, 2017

சாட்டையை கையில் எடுக்கிறார் சசி! 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்?


 
ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இறந்தார். அவா் 6ம் தேதி அடக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் கடந்த 31ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.
அவா் மாவட்டம் தோறும் நேர்காணல் நடத்தி வருகிறார். இதில் அவருக்கு எதிராக செயல்படுபவா்கள் கணக்கிடப்படுகிறது.
பின்னா், அவா்களுக்கு கல்தா கொடுக்கவும் திட்டம் வைத்துள்ளார் சசிகலா. ஜெயலலிதா போலவே பொட்டு வைத்து, உடையணிந்து, கொண்டை போட்டு, நடந்து வருகிறார்.
ஜெயலலிதா போலவே கடிதம் எழுத பழகிவிட்டார். இப்போது அவரைப்போலவே பேசவும் பழகிவருகிறாராம்.
ஜெ., போலவே ஒரு கருத்துக்கணிப்பை சசிகலா நடத்தியிருக்கிறார். அதில் அவருக்கு பாதகமான முடிவுகளே தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் வெளிப்பட்டுள்ளன என்கிறார்கள். இந்நிலையில் சசிகலா  அமைச்சரவையிலும் மாற்றம் செய்யலாம் என முடிவு செய்திருப்பதாக  கூறப்படுகிறது.
தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் ஆறு பேரை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக மூன்று பேரை அமைச்சராக ஆக்கவும் சசிகலா முடிவுசெய்துள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் நீக்கப்பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று அமைச்சா்கள் யார், யார் என்று விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவில் அமாவாசை இரவு, பவுா்ணமி இரவு ஆகிய இரண்டு நாட்கள் முக்கியமான நாட்கள். இந்தநாட்களில்தான் நள்ளிரவு ஜெயலலிதா அதிரடி முடிவுகளை அறிவிப்பார்.
அது போல விரைவில் பவுா்ணமி தினத்தன்றோ. அல்லது அமாவாசை தினத்தன்றோ சசிகலா அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. உச்சக்கட்ட பயத்தில் அமைச்சா்கள் உள்ளனா்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.