Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

விளம்பரமில்லா வீடியோ முதல் ரெயின்போ பேஜ் வரை...யூ-டியூபின் இந்த 6 ட்ரிக் உங்களுக்குத் தெரியுமா?


ஆபீஸ்ல வேலை பார்க்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பாட்டாலோ.... பாட்டு கேட்டுகிட்டே வேலை பார்க்கணும்னு நினைச்சாலோ...ஆட்டோமேட்டிக்கா விரல்கள் டைப் பண்ணுறது யூ-ட்யூப் தான். அந்த யூ-ட்யூப்ல உங்களை ஆச்சர்யப்படுத்தும் #YouTubeTricks உங்களுக்கு தெரியுமா? 1. Doge Meme யூ-ட்யூப் சர்ச் பார்ல ''Doge Meme''னு டைப் பண்ணுங்க உங்க யூ-ட்யூப் முழுவது வண்ணமயமா மாறிடும். எல்லாம் எழுத்துக்களும் கலர்ஃபுல் ஃபாண்ட்ல தெறி காட்டும். YouTubeTricks 2. ரிப்பீட்டு: ஒரே ஒரு பாட்ட ரிப்பீட் மோட்ல கேக்கணும்னு நெனைச்சா நேரடியா ஆப்ஷன் எங்க இருக்குனு தேடிகிட்டே இருப்போம். ஆனா ரைட் க்ளிக் பண்ணி ''Loop'' கொடுத்தா போதும்ங்கறது பல பேருக்கு தெரியாத விஷயம். அப்படி இல்லன்னா listenonrepeat.com ங்கிற இணையதளத்துல யூ-ட்யூப் லின்க் பேஸ்ட் பண்ணி ரிப்பீட் மோட் என்ஜாய் பண்ணலாம். யூ-ட்யூப் ட்ரிக்ஸ் 3. use the force luke: யூ-ட்யூப் பக்கம் கசங்கிய பேப்பர் போல காட்சியளிக்க வேண்டும் எப்படியே வீடியோக்களையும் ரசிக்க வேண்டும் என்றால் use the force luke என யூ-ட்யூப் சர்ச்சில் டைப் செய்யுங்கள்...உங்க யூ-ட்யூப் பக்கம் கசங்கி இருக்கா? 4. do the harlem shake do the harlem shake என யூ-ட்யூப்பில் டைப் செய்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு யூ-ட்யூப் பக்கம் ஷேக் ஆவதை உங்களால் பார்க்க முடியும். 5. யூ-ட்யூப் கேட்கலாம் listentoyoutube.com என்ற இணையதளத்தில் நீங்கள் வீடியோவாக அல்லாமல் mp3-யாக கேட்க நினைக்கும் லின்க்கை அளித்தால் போதும் உங்கள் யூ-ட்யூப் வீடியோவை mp3யாக மாற்றித்தரும். 6. விளம்பரம் வேண்டாம்: ரொம்ப ஆர்வமா ஒரு யூ-ட்யூப் வீடியோ பார்க்கப் போகும் போதுதான் ஒரு விளம்பரம் வந்து தொந்தரவு செய்யும். அதிலிருந்து தப்பிக்க எந்த எக்ஸ்டென்ஷனும் போட வேணாம். ரொம்ப சிம்பிளா. யூ-ட்யூப் வீடியோ இருக்குற பேஜ்ல கூகுள் க்ரோமா இருந்தா Ctrl+Shift+J, ஃபயர் பாக்ஸா இருந்தா Ctrl+Shift+K டைப் செய்யுங்க யூ ட்யூப் பக்கத்துல ஓப்பன் ஆகுற டெவலப்பர் கன்சோல்ல document.cookie="VISITOR_INFO1_LIVE=oKckVSqvaGw; path=/; domain=.YouTube";window.location.reload(); இந்த கோட பேஸ்ட் பண்ணுங்க. அப்பறம் என்ன விளம்பரம் இல்லா யூ-ட்யூப் வீடியோக்கள் தான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.