January 17, 2017
அலங்காநல்லூரில் கைதானவர்களில் 5 பேர் விடுதலை : மற்றவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தொடர்ந்து 21 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் காலை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 240-க்கும் மேற்பட்ட இவர்களை மண்டபத்திலிருந்து வெளியேற சொல்லியும் மறுப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் உணவு உண்ண மறுத்து தொடர்ந்து மண்டபத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்களை வெளியேற உத்தரவிட்டும் அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறாமலும், உணவு அளித்தாலும் அதனை உண்ணாமலும் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் திடமாக உள்ளதாகவும், அதுவரை உணவு உண்ணப் போவதில்லை என தெரிவித்ததாக அவர்களை நேரில் சந்தித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். உஇந்நிலையில் நேற்று காளைகளை அவிழ்த்துவிட்டதாக கைது செய்யப்பட்ட 35 பேரை காவல்துறையினர் விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவா்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தி மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை தங்களது மறியல் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.மதுரை மாவட்டம் மேலூரில் மூன்றாவது நாளாக இன்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும் என்றனர்.
மேலும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரியும் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டகளத்தி்ல் குதித்தனர்.இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். சென்னை விவேகானந்தர் இல்லம் முன் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மற்றும் மதுரையிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்ட களத்தில் இறங்கினர். மதுரை, சேலம், சென்னையை தொடர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரி திருச்சியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கல்லூரி மாணவர்கள் மவுன போராட்டம் நடத்தினர். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரி வன்னியன்விடுதியில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி வாடிவாசல் முன் 21 மணி நேரமாக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.போராட்ட நேரம் முடிந்து விட்டதாக கூறி அனைவரையும் போலீஸ் கைது செய்தனர். வாடி வாசல் வழியாக காளைகளை திறந்து விட போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். 21 மணி நேரம் போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீஸ் இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டதாக மதுரை மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.
அலங்காநல்லூரில் கைதானவர்களில் 5 பேர் விடுதலை : மற்றவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்
Reviewed by மறத்தமிழன்
on
January 17, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.