Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 12, 2017

ஒரு பக்கம் அச்சிடப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு


மத்திய பிரதேசத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் அச்சிடப்படாததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் செகோன் கிராமத்தை சேர்ந்த ஹேமந்த் சோனி என்பவர் 2 நாட்களுக்கு முன்பு வங்கி ஏடிஎம் மையத்திலிருந்து 1500 ரூபாய் பணம் எடுத்தார். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து மூன்று 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. அதில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் பிரிண்டாகாமல் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் தெரிவித்தார்.

அதற்கு வங்கி தரப்பில் இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றதாக விளக்கம் கூறினர். இதையடுத்து வாடிக்கையாளர்களின் புகாரையடுத்து அந்த நோட்டுகள் மாற்றப்பட்டன. தற்போது ரூபாய் நோட்டுகளை நன்கு சோதனை செய்தபின்னரே ஏடிஎம்-களில் நிரப்பப்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோன்று மத்திய பிரதேச மாநிலம் சொபூரில் பாரத ஸ்டேட் வங்கியில் காந்தி படம் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.