அடுத்த நிதியாண்டில், 44 லட்சம் பேருக்கு கியாஸ், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புடன் வீடுகள் கட்டி தரப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கான பணம், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக போடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
44 லட்சம் பேர்
மத்திய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமர்ஜீத் சின்கா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
அடுத்த நிதியாண்டில், 33 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தர முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 44 லட்சம் பேருக்கு வீடுகள் அளிக்கும்வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இது செயல்படுத்தப்படும்.
இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி முடிவடைந்து விட்டது.
வங்கிக்கணக்கில் பணம்
பயனாளிகளின் பெயரில் நிலத்தை மாற்றி தருமாறு மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளோம். பயனாளிகளில் 60 சதவீதம் பேர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருப்பார்கள்.
சமவெளி பகுதியில் இருப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரமும், மலைப்பகுதியில் இருப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் தவணைகளாக அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பணம் தவறாக பயன்படுத்தப்படுவதையும், வேறு நபரின் கைக்கு செல்வதையும் தடுக்க இவ்விதம் செய்யப்படும்.
கியாஸ்
இத்திட்டத்தில், வெறும் வீடுகளாக இல்லாமல், அடிப்படை வசதிகள் நிறைந்த இல்லமாக அளிக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். எனவே, பயனாளிகளுக்கு கியாஸ் இணைப்பு, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவை அளிக்கப்படும்.
அத்துடன், கழிப்பறை கட்டு வதற்கு கூடுதலாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். பயனாளிகள் தங்கள் வீடுகளை கட்டும் பணியில் வேலை செய்வதற்காக, ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 90 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
வீடுகளை கட்டி தருவதற்காக, 30 ஆயிரம் கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.