January 15, 2017
பைரவா படம் பார்க்கும்போது இருதரப்பினர் இடையே தகராறு: 3 பேருக்கு அரிவாள் வெட்டு
அம்பாசமுத்திரம் பகுதியில் பைரவா திரைப்படம் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், மூவருக்கு அரிவாளால் வெட்டப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பைரவா திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கோவில்குளத்தைச் சேர்ந்த வேலாயுதம், மணி, இசக்கிப் பாண்டி ஆகியோருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை மணி மற்றும் இசக்கியை சந்திக்க, வேலாயுதம் சென்றுள்ளார். அப்போது சின்ன சங்கரன்கோவில் செல்லும் சாலையில் வேலாயுதம், மணி, இசக்கிப் பாண்டி ஆகியோரை வழிமறித்த கும்பல், திடீரென்று அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் படுகாயமுற்ற அம்மூவரும், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைரவா படம் பார்க்கும்போது இருதரப்பினர் இடையே தகராறு: 3 பேருக்கு அரிவாள் வெட்டு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.