Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

காவல்நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர் உள்பட 3 பேர் காயம்



செங்கம் அருகே காவல்நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யபப்பட்ட பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர் ஒருவர் ள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த காவல் நிலையம் பயன்படுத்தப்படாமல், புதிய பேருந்து நிலையம் அருகே காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றும் போது நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது.

மேலும் இப்பகுதிக்கு நாட்டுவெடிகுண்டு வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.