January 5, 2017
எம்.ஜி.ஆரை காலில் விழ வைத்த 2 பேர்! பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் விழுந்தார் எம்.ஜி.ஆர்.!
அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படுபவர் கருணாநிதி. தமிழகத்தில் பிறக்காமல் உத்திரப்பிரதேசத்தில் பிறந்திருந்தால் கருணாநிதி பிரதமே ஆகி இருப்பார் என்பார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அந்த ஜாம்பவானையே அடக்கி, வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது காலில் விழாத பிரபலங்களே இல்லை. ஆனால் அந்த எம்.ஜி.ஆர். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தனது தாய் சத்யபாமாவின் காலில் விழுவார்.
அதுதவிர மேலும் 2 பேரின் கால்களில் எம்.ஜி.ஆர் விழுந்துள்ளார். அதில் ஒருவர் எம்.கே.ராதா. எம்.ஜி.ஆர் முதன்முதலில் நடித்து 1936 ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி படத்தில் நடித்தவர் தான் இந்த எம்.கே.ராதா.
எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைக்க இவரே காரணமாக இருந்தார். இதன்காரணமாக பல்லாயிரம் பேர் முன்னிலையில் இவரது காலில் எம்.ஜி.ஆர். விழுந்தார்.
எம்.ஜி.ஆரின் இரண்டாவது படமான ரிக்ஷாகாரன் வெற்றி பெற்று அவருக்கு தேசிய விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்ற போது எம்.கே. ராதா அங்கு வந்திருந்தார்.
அந்த மேடையில் தான் எம்.ஜி.ஆர் அவரது காலில் விழுந்தார். மற்றொருவர் எம்.ஜி.ஆர். சினிமா துறைக்கு வர காரணமாக இருந்த இயக்குநர் சாந்தாராம். இவர்கள் இருவரின் காலில் தான் எம்.ஜி.ஆர். விழுந்துள்ளார்
எம்.ஜி.ஆரை காலில் விழ வைத்த 2 பேர்! பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் விழுந்தார் எம்.ஜி.ஆர்.!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.