January 28, 2017
250 வழக்குகள் தேடப்பட்டு வரும் ‘ஃபிராடு’ பெண்மணி..!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட 250 வழக்குகளில் இளம்பெண் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி என பொய் சொல்லி,வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து 2 லட்ச ரூபாயை கையாடல் செய்ததாக,குஷ்பு ஷர்மா என்ற பெண்ணை கர்நாடக காவல்துறையினர் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர்.அவர் மீதான குற்றப் பத்திரிக்கை சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அப்போதுதான் அவர் இது போன்ற 250 வழக்குகளில் தேடப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.இந்த வழக்குகள் டெல்லி,ராஜஸ்தான்,மகராஷ்டிரா,சத்தீஸ்கர்,தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதியப்பட்டுள்ளன.
குற்றம்சாட்டப்பட்டுள்ள குஷ்பு ஒரு மாற்றுத்திறனாளி.சிறு வயதில் நடைபெற்ற ரயில் விபத்து ஒன்றில்,தனது வலது கையை பறி கொடுத்துள்ளார்.பின்னர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திய அவர்,போலியாக பட்டப்படிப்பு சான்றிதழை பெற்றுள்ளார்.பின்னர் வீட்டை விட்டு வெளியேறி பலரை ஏமாற்றி பணம் பறித்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என குறிப்பிட்டு முகநூல் பக்கம் ஒன்றை துவங்கிய குஷ்பு,அதன் மூலம் முக்கியமான அரசியல்வாதிகள்,செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் ஆகியோரை தொடர்பு கொள்வார்.அவர்கள் தொடர்பு கொண்டு பேசியவுடன் ,அந்த நபர்களை காபி ஷாப்பில் சந்திப்பார்.அதன் பின்னர் தன்னை சந்திக்க வந்த நபர்கள் மீது கற்பழிப்பு புகார் அளிப்பேன் எனக் கூறி,அவர்களிடமுள்ள பொருட்களையும்,பணத்தையும் மிரட்டி வாங்கிக் கொள்வார்.இப்படி பல லட்ச ரூபாய் பணமும்,விலை உயர்ந்த பொருட்களையும் குஷ்பு பெற்றுள்ளார்.
இது மட்டுமல்லாமல் 2015-ஆம் ஆண்டு டெல்லியில் கார் திருட்டிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் பெங்களூரில் தங்கியிருந்த இவர்,தற்போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
250 வழக்குகள் தேடப்பட்டு வரும் ‘ஃபிராடு’ பெண்மணி..!
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.