January 8, 2017
2017 பஞ்சத்திற்கான எச்சரிக்கை பதிவு !!
நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமா நம் தலைமுறைகள் வாழ வேண்டாமா...?
சென்ற வருடம்(2016) நாம் நினைத்தது போல் மழை பெய்யாமல் பொய்த்து போனது அனைவரும் அறிந்ததே..
இந்த மழை பொய்ப்பினால் இந்த வருடம்(2017) நினைத்தது போல் விவசாயத்திற்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.
தை மாதம் பிறக்கும் முன்னரே இந்த நிலை என்றால் கோடைகாலத்தில் நாம் குடிக்க மட்டுமல்ல மலமிட்ட பின் கால் கழுவ கூட தண்ணீர் இல்லாத அளவிற்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆகவே முடிந்த அளவுக்கு தற்ப்பொழுதிலிருந்தே தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துங்கள்...
செயல்படாத நிலையில் இருக்கும் அரசு இருக்கின்ற வேளையிலே நமக்கான பஞ்சத்தை நாமேநான் சரி செய்தாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம்.
விவசாயி ஒருவன் தண்ணீர் இன்றி மனம் வருந்தி இறந்தால் வருமை என்பது ஒருபுறம் என்பது இருந்தாலும் உண்மையில் அது அடுத்து ஏற்படப்போகும் பஞ்சத்தின் அறிகுறி ஆகும்.எனவே விவசாயி இழப்பினை சாதாரண விடயமாக எண்ணாமல் குறித்த முன்னெச்சரிக்கையையும் விவசாயிகளுக்கான ஆதரவையும் அளியுங்கள்.
வாய்காலும் தண்ணீரும் ஒன்றாகத்தான் இருந்தது
விளைநிலமா இருந்தது,
அனால் இப்போ எல்லாமே தலைகீழா போனது
தடம் மாரி நிற்குது.........
நிலாவிலே தண்ணீரு இருக்கான்னு தேடுறோம்,
இராக்கெட்ட ஏவுகிறோம்,
குடிநீரை பூமியிலே வியாபாரம் பன்னுறோம்.......
ஆறு இருக்கும் பட்சத்தில ஊரு எல்லாம் வாழ்ந்தது,
வரலாறு சொன்னது,
ஊரு மட்டும் இருக்கின்றது ஆறுகளை காணல, போன இடம் தெரியல.....
பறவை இனத்தை , காடுகளை பாதி ஜனம் அழிக்கின்றது நன்றி மறந்து சிரிக்கின்றது ஆறு அறிவை வைத்துக்கொண்டு ஆணவத்தில் வாழ்கின்றது....
மண்ணைப்போல் தண்ணிக்கும் எல்லை கோட்ட போடுகிறோம் வறுமை கோட்டை வளற்க்கிறோம்,
இயற்கையை பூட்டி வச்சி பொம்மையாக்க பார்கிறோம் அடிமையாக்க நினைக்குறோம்.....
இப்படியோ தெடர்ந்தால் பூச்சி இங்கே வாழுமடா புழுவும் இங்கே வாழுமடா,
மனிதபய இனம் மட்டும் மண்ணாகி போகுமடா....
இவன்,
மண்ணை பறிகொடுத்து விண்ணை பார்க்கின்ற விவசாயி....
நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமா நம் தலைமுறைகள் வாழ
வேண்டாமா...?
#please_save_nature
2017 பஞ்சத்திற்கான எச்சரிக்கை பதிவு !!
Reviewed by Admin
on
January 08, 2017
Rating: 5
Reviewed by Admin
on
January 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.