January 11, 2017
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ. 2000 பரிசு! விசாரணை இல்லை! கெஜ்ரிவால் அதிரடி!
அதிரடிக்கு பெயர் போனவர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால். மத்திய அரசு டெல்லிக்கு குறைவான அதிகாரமே வழங்கியுள்ளதால், அவரால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை.
அதே நேரம் தன்னால் முயன்ற வரை மக்கள் நலத் திட்டங்களை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் விபத்துக்கள் மற்றும் காற்று மாசுபாட்டை தடுக்க ஆட் ஈவன் பார்முலா உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால், காப்பாற்றியவருக்கு ரூ. 2ஆயிரம் பரிசு வழங்கப்படும் என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் வறுத்தெடுத்து விடுவார்கள். டெல்லியில் இனி அதுபோல் இருக்காது என்றும் மணிஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ. 2000 பரிசு! விசாரணை இல்லை! கெஜ்ரிவால் அதிரடி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.