Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

20 வருடமாக மனைவியுடன் பேசாத கணவன்! காரணத்தை கேட்டா டென்ஷனாகிடுவீங்க



20 வருடங்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்த தங்களது பெற்றோரை பேச வைத்து பிள்ளைகள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.
Otou , Katayama ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு அன்யோன்யமாக வாழ்ந்து வந்தனர். சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசாக 4 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
தனது குழந்தைகள் அளவுற்ற அன்பினை செலுத்தி வந்த மனைவியை பார்த்த ஓட்டோவுக்கு அவர் மீது பொறாமை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் மீது அதிக அக்கறை காட்டும் அவள், என்னை நிராகரித்து விட்டாள் என்று உணர்ந்துள்ளார். மேலும் குழந்தைகள் மீது தனது மனைவி காட்டும் அன்பினை பார்த்து இவருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது மனைவியோடு பேசுவதை நிறுத்தியுள்ளார். குழந்தைகளை மிகவும் அன்போடு வளர்த்து, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒன்றாக சேர்ந்து பாடுபடும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த போதும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேசாமல் இருந்துள்ளனர்.
சுமார் 20 வருடங்களாக இதே நிலைதான். இதனைப்பார்த்த குழந்தைகள் தங்கள் பெற்றோரை பேச வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன்படி, ஒரு தொலைக்காட்சி உதவியுடன் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதற்கு ஏதுவாக பூங்கா ஒன்றினை ஏற்பாடு செய்தனர்.
பூங்காவில் அமர்ந்து பெற்றோர் பேசிக்கொள்வதை இக்குழந்தைகள் ஒளிந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.
கணவர் கூறியது, இத்தனை வருடங்களாக உன்னுடன் பேசாமல் இருந்ததற்கு காரணம், நீ குழந்தைகள் மீது கொள்ள அளவுற்ற அன்பு என்னை தனிமைப்படுத்தியது. இதனால் நான் உன் மீது பொறாமை கொண்ட காரணத்தால் பேசாமல் இருந்துவிட்டேன்.
இனிமேல் இந்த தவறு நடக்காது எனக்கூறியுள்ளார். தந்தையின் இந்த வார்த்தையை கேட்ட அவரது குழந்தைகளும் தாய் மீது தந்தை வைத்துள்ள அன்பை நினைத்து உணர்ச்சிபொங்க கண்ணீர் வடித்தனர்.
எப்போதும் பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு இலக்கணமாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவார்கள். ஆனால் இங்கு குழந்தைகளே பெற்றோரை இணைத்து வைத்து தாங்கள் சிறந்த பிள்ளைகள் என்பதை நிரூபித்துள்ளனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.