January 22, 2017
இங்க நாங்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம், உங்களுக்கு செல்பி கேக்குதா? நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர்க
மதுரை செல்லும் விமானத்தில் பயணித்த முதல்வர் பன்னீர் செல்வத்துடன் நியூஸ் 18 செய்தியாளர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர். சென்னையில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், ஏ,சி அறையில் இருந்து அவர்களின் போராட்டத்தை விவரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், இன்று மதுரை அலங்காநல்லூரில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு குறித்து செய்திகள் தர மதுரை விரைந்தனர். அப்போது அதே விமானத்தில் மதுரை பயணித்து கொண்டிருந்த முதல்வர் பன்னீர் செல்வத்துடன் செல்ஃபி எடுத்து கொண்டு அதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டனர்.
இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் வெயிலிலும், பனியிலும், போராடுகிறோம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்கிறீர்கள் என்று தங்களது மன குமுறல்களை பதிவாக வெளியிட்டுள்ளனர்.
மேலும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இங்க நாங்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம், உங்களுக்கு செல்பி கேக்குதா? நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர்க
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 22, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.