Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

'15 வருஷமாவே கட்டாய விடுப்பில் கிடையாது பொங்கல்' - உண்மையை போட்டுடைக்கும் அன்புமணி



கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறியுள்ள திமுக, மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.
அதிமுக தலைமையும் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது. இந்த செய்திகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை.
விருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய தேசிய விடுமுறை நாட்களாகவும், 12 நாட்கள் விருப்ப விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுகின்றன.
கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் விடுதலை நாள், குடியரசு நாள், காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் அனைத்து மத திருவிழாக்கள், முகரம் ஆகியவை தவிர தமிழகத்தில் கொண்டாடப்படும் தீப ஒளித் திருநாளும் இடம் பெற்றுள்ளது.
விருப்ப விடுமுறை நாட்களில் 10ஆவது இடத்தில் பொங்கல் திருநாள் இடம் பெற்றிருக்கிறது.
இதே நடைமுறை தான் பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால், தவறுதலாக யாரோ பரப்பிய தகவலை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள் கண்டனம் மற்றும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதும் நடந்திருப்பதாக கருதுவதாக குறிப்புட்டுள்ளார்.

அதேநேரத்தில் தேசிய இனமான தமிழர்களின் முதன்மைத் திருநாளான பொங்கல் திருநாளுக்கு கட்டாய தேசிய விடுமுறை நாளில் இடம் பெறுவதற்கான அனைத்து சிறப்புகளும், தகுதிகளும் உள்ளன.
அவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் திருநாள் கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், ஏனோ அவ்வாறு செய்யப்படவில்லை. இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம் பெற்றுள்ள நிலையில், பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.