Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 30, 2017

144 தடை உத்தரவை விலக்குங்கள்... பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுங்கள்- ஸ்டாலின்


மெரினா கடற்கரையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரர்கள் உள்ளிட்ட 24 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பை வாசித்தார். இதனையடுத்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கேள்வி நேரத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. சசிகலா பற்றி செல்லூர் ராஜூ பேசினார் அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீண்டாமை உறுதி மொழி எடுத்துக்கொள்வதற்காக அரை மணிநேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடிய உடன் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் காவல்துறை அமல்படுத்தி உள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஊடகங்களில் கூறியதற்கும் முதல்வர் அளித்த விளக்கத்திற்கும் முரண்பாடு உள்ளது என்று கூறினார்.
காவல்துறை அதிகாரி சீருடையில் எப்படி ஊடகங்களில் பங்கேற்கலாம்?

என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'மு.க.ஸ்டாலின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.