Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 29, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழை - வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியது..


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக 2,834 குடும்பங்களைச் சேர்ந்த 10,010 பேர் பாதிக்கபட்டு உள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரவிக்கின்றன.

கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை திகிலிவட்டை, பெரில்லாவெளி, குடும்பிமலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,155 குடும்பங்களைச் சேர்ந்த 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக தரை வழி துண்டிக்கப்பட்ட மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை திகிலிவட்டை, பெரில்லாவெளி, குடும்பிமலை ஆகிய கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியதுடன், நிவாரணங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, கிரான் - புலிபாய்ந்தகல் பிராதன வீதி நீரில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலக ஊழியர்கள் படகு மூலம் தமது சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.