Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 18, 2017

‘‘போராட்டக்காரர்களுக்கு ரூ.1 கோடி செலவு பண்ணத்தயார்’’ நடிகர் லாரன்ஸ் பரபரப்பு பேச்சு



தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக மாணவர்களின் போராட்டங்கள் வலுத்துவருகிறது. மேலும், தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு அரங்கேறியது. அதுவும் சில நிமிடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி விடிய விடிய போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தற்போது நடிகர் லாரன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் சென்னை மெரீனா கடற்கரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்றிரவு முதல் இங்கு உணவு மற்றும் மருந்துகள் இன்றி அவதிப்படுவதாக தனக்கு மெசேஜ் வந்ததாகவும், இந்தப் போராட்டம் வெற்றியடைய தம்பி, தங்கைகளுக்காக ரூ.1 கோடி செலவு செய்யத் தயார் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்த பேட்டியால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு இன்னும் உற்சாகத்தை கொடுத்துள்ளது எனக் கூறலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.