இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ராவணன் என யுவராஜ்சிங்கின் தந்தை, யோக்ராஜ்சிங் விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங், அடிக்கடி தோனியை விமர்சிப்பது வழக்கமாகி வருகிறது. யுவராஜ்சிங்கிற்கு அணியில் இடம் கிடைக்காமல் போனபோது, ''தோனி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்'' என யோக்ராஜ்சிங் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி விட்டார். மூன்று வகையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு இப்போது விராட் கோலிதான் கேப்டன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். வருகிற ஜனவரி 15ம் தேதி புனேவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தோனி கூறித்து யோக்ராஜ் சிங் கூறியதாவது,'' இந்திய அணிக்குள் எப்போதுமே அரசியல் இருந்திருக்கிறது. நானும் இந்திய அணிக்காக விளையாடியவன். அரசியல் அரங்கேறுவது எப்படி என்று எனக்கும் தெரியும். யுவராஜ்சிங்கிற்கு அது போன்ற பாலிடிக்ஸ் எல்லாம் தெரியாது. தற்போது விராட் கோலி கேப்டனாகியிருக்கிறார். உள்ளுர் போட்டியிலும் டி20 போட்டியிலும் சிறப்பாக விளையாடும் சிறந்த வீரரை திறமையுள்ளவரை எப்படி புறக்கணிக்க முடியும?. ஒருநாள், டி20 போட்டிகளில் யுவராஜ் விளையாடத் தகுதியானவர். ஆனால், இதனை தோனி புரிந்துக் கொள்ளவில்லை. புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை.
கடந்த மே மாதம் யுவராஜிடம் நான் ஒரு விஷயத்தை சொன்னேன். 'அணியில் உள்ள எந்த வீரரும் உனக்கு ஆதரவாக இல்லை. தோனி ஒருநாள் ரிட்டையர்டு ஆவார் அப்போது உனக்கு வாய்ப்புத் தேடி வரும். விளையாட்டில் கவனம் செலுத்து வெற்றி காண முடியும்' என்றேன். திறமை காட்டினான் இப்போது வாய்ப்பும் தேடி வந்திருக்கிறது. யுவராஜ் கூட நான் சொல்வதை அப்போது நம்பவில்லை. எனது பேச்சையும் கேட்டதில்லை. ஆனால், இப்போது தந்தையின் சொன்னது சரி என்பதை உணர்ந்திருக்கிறான்.
கடந்த 2015ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய போது, தோனி ராவணன் போலவே மாறிப் போனார். ராவணண் கதை எப்படி முடிந்தது என்று எல்லோருக்குமேத் தெரியும்.அது போல இப்போது தோனியின் கதை முடிவுக்கு வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் யுவராஜ் திறமை மிகுந்தவன். தோனியின் பேட்டிங் திறமையும் இப்போது மங்கியிருக்கிறது.முன்னர் போல அவரால் திறமையாக விளையாட முடியாது. பேட்டிங் வரிசையில் யுவராஜை , விராட் கோலி நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். தோனி செய்த தவறை கோலி நிச்சயம் செய்ய மாட்டார். யுவராஜ் பந்துவீச்சையும் விராட் கோலி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
யோக்ராஜ்சிங், இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். அணியில் இருந்து யுவராஜ் வெளியேற்றப்படும் போதெல்லாம் தோனியை விமர்சிப்பது யோகராஜின் வழக்கம். தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி, சாதாரண வீரராக களம் இறங்கப் போகிறார். தற்போதும் யோக்ராஜ், தோனியை விமர்சித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தோனியை தனது தந்தை விமர்சித்தாலும் யுவராஜ், தோனியிடம் அன்புடன் நட்பு பாராட்டிக் கொள்வதையும் காண முடிகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.