கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லியில் இன்று சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார் சுந்தர் பிச்சை.
'கடந்த 18 ஆண்டுகளாக எவ்வளவு மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த முடியும் என்பதையே இலக்காக வைத்துள்ளது கூகுள். அதற்கு ஆன்ட்ராய்ட் போன்ற தளங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டால், உலகுக்குத் தீர்வை கண்டுவிடலாம்' என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியின் போது, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடன் இருந்தார். இந்நிகழ்ச்சியில், 'மை பிஸ்னஸ்' (My Business) என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இணையதளத்தின் மூலம் 10 நிமிடங்களில் சிறிய தொழிலுக்குத் தேவையான இணையதளத்தை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 'டிஜிட்டல் அன்லாக்ட்' (Digital Unlocked) எனும் புதிய கோர்ஸ் (course) இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஆன்லைனில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதற்கான வழிவகைகள் இருக்கும் எனக் கூறப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.