இன்று காலை சோ காலமானார். அவரது நினைவுகளை கூறும் பொக்கிஷ பகிர்வு இது
2004-ம் ஆண்டு. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரம் அது. அ.தி.மு.க-வுக்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு அலை வீசியது. தி.மு.க-வும் ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து ஊடகங்களும் கருத்துக்கணிப்பு நடத்தி, ‘தி.மு.க கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும்’ என்று கட்டியம் கூறிக்கொண்டு இருந்தன. இப்படியாகச் சூழல் இருந்தபோது... அவர் மட்டும் ஜெயலலிதாவை ஆதரித்து, தொடர்ந்து ‘துக்ளக்’கில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார். ‘‘அ.தி.மு.க கணிசமான இடங்களை வெல்லும்’’ என்றார். ஆனால், அ.தி.மு.க படுதோல்வி அடைந்து, 40 தொகுதிகளையும் இழந்தது. தேர்தல் முடிவுகள் வந்தபின் ‘துக்ளக்’ இதழ்கள் கடைகளுக்கு வந்தன. பொதுவாக, நாம் சொன்ன விஷயம் நடக்கவில்லை என்றால் என்ன செய்வோம்? அதற்கு, ஒரு காரணம் கற்பிப்போம்தானே? ஆனால், இவர் அப்படியாக எதுவும் செய்யவில்லை. இவர் செய்தது தன்னைத்தானே கிண்டல் செய்து, ‘துக்ளக்’கின் அட்டைப் படத்திலேயே ‘கார்ட்டூன்’ போட்டுக்கொண்டதுதான்.
ஆம்... இதுதான் சோ!
2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் சமயம். அதுவரை ஈழத்துக்கு எதிராக இருந்த ஜெயலலிதா, அந்தத் தேர்தலில் தனி ஈழத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்துக்கொண்டிருந்த சோவிடம், “என்ன ஜெயலலிதா இப்போது ஈழத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டாரே...?” என்று கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர், “தேர்தலுக்காக அவ்வாறாகப் பேசுகிறார். அதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...” என்றார். அந்தச் சமயத்தில் இதுமாதிரி ஒரு பதிலைச் சொல்வது தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியைப் பாதிக்கும் என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை.
ஆம்... இதுதான் சோ!
எதை மனதில் நினைக்கிறாரோ... எதை அவர் சரி என்று நம்புகிறாரோ... அதை எப்போதும் பேசக்கூடியவர். தான் ஒருவரை ஆதரிக்கிறோம் என்பதற்காகவெல்லாம், அவர்களின் கருத்துகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர் இல்லை சோ.
எமர்ஜென்சியை முன்பே கணித்தவர்!
‘இந்திரா காந்தி எமர்ஜென்சியைக் கொண்டுவரப்போகிறார்’ என்று முன்பே கணித்து கட்டுரைகளையும், கார்ட்டூன்களையும் முதலில் வெளியிட்டது சோதான். எமர்ஜென்சி நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, ஜெய்பிரகாஷ் நாராயணன், கிர்பாலனி, மொரார்ஜி போன்றோர் சிறையில் இருப்பது போன்ற கார்ட்டூன்களை வெளியிட்டார். அப்போது யாரும் இந்தியாவில் எமர்ஜென்சி வரும் என்பதை நம்பவில்லை. ‘‘சோ அனைத்தையும் மிகைப்படுத்துகிறார்’’ என்றார்கள். ஆனால், அதுதான் இறுதியில் நடந்தது.
எமர்ஜென்சியைக் கடுமையாக எதிர்த்தவர்களில் சோவும் ஒருவர். ஊடகங்கள் கடுமையாகத் தணிக்கைக்கு உள்ளாகின்றன என்பதை சுட்டிக்காட்ட, ‘துக்ளக்’கின் அட்டைப்படத்தை கறுப்பு நிறத்தில் வெளியிட்டார். எதையும் அங்கதம் செய்யும் சோ, எமர்ஜென்சியையும் தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார். ஆம். ஒரு நாள் தணிக்கை அலுவலகம் இயங்கிய சாஸ்திரி பவனுக்குச் சென்று, “என் பத்திரிகையை நீங்கள்தான் திருத்துகிறீர்கள். என் பத்திரிகையில் என்ன வரவேண்டும். என்ன வரக் கூடாது என்று நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். சொல்லப்போனால், நீங்கள்தான் ‘துக்ளக்’குக்கு ஆசிரியராகச் செயல்படுகிறீர்கள். அதனால், உங்களுக்குத்தான் சம்பளம் தரவேண்டும். என் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்றார்.
ஆம்... இதுதான் சோ!
அவரிடம் கற்க ஒரு பாடம்!
10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி தந்தார் சோ. அதில் அவரிடம், “உங்களுக்கு எப்படி எமர்ஜென்சியை எதிர்க்க இவ்வளவு துணிச்சல் வந்தது’’ என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர், “என்னிடம் எதுவும் இல்லை. என் தலையில் முடிகூட இல்லை. என்னை அவர்கள் என்ன செய்துவிட முடியும்? அது மட்டுமல்ல, நான் விதியை நம்புகிறவன். என்னுடைய நேரம் முடிந்துவிட்டால், நான் செல்ல வேண்டியதுதான். என் நேரம் இன்னும் இருக்கிறதென்றால், அவர்களால் என்னை என்ன செய்துவிட முடியும்..?” என்றார்.
இன்னொரு கேள்விக்கு, அவர், “இப்போதுதான் எமர்ஜென்சியைக் கொண்டுவர சரியான சமயம். மக்கள், தங்கள் கடமையை உணரவில்லை... சட்டங்கள் மீறப்படுகின்றன.... அதனால் இப்போதுதான் எமர்ஜென்சியைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.
ஆம்... இதுதான் சோ!
கருத்தியல் ரீதியாக அவருடன் நாம் முரண்படலாம்... அவர் முன்வைக்கும் சித்தாந்தத்தை எதிர்க்கலாம். ஆனால், அவரிடம் நாம் கற்க ஒரு பாடம் இருக்கிறது. அது, ‘தான் நம்பும் விஷயத்தை சமரசமின்றி உரக்க பேசுவது’ . ஆம், அவர் தான் நம்பும் விஷயம் பிறருக்கு அசெளகர்யமாக இருக்கும் என்று அவர் நினைத்து, பிறருக்கு பிடித்ததுபோல் பேசுவதில்லை. பொது புத்தி, இதைத்தான் நினைக்கிறது என்று இவரும் அதையே வழிமொழிவதும் இல்லை. ஆம், எப்போதும் தன் கருத்தியலை, தத்துவத்தை உரக்கப் பேசுபவர் சோ.
இது நிச்சயம் அவருடம் சித்தாந்த ரீதியாக முரண்படுபவர்களும் கற்க வேண்டிய பாடம்...!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.