மூன்றாவது நாளாக பாரீஸ் நகருக்குள் நுழையும் கார்களை பாரீஸ் நகர அதிகாரிகள் தடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் பாரீஸ் நகருக்குள் நுழையும் கார்கள் பாதியாக குறைந்துள்ளன. பாரீஸ் நகருக்குள் நுழைய தடை செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் புகை அதிகமாக கக்கிய வாகனங்கள்தான். இதனால் ஏற்படும் போக்குவரத்து தட்டுப்பாட்டை சமாளிக்க பொதுப்போக்குவரத்தை இலவசம் செய்துவிட்டார்கள். இதற்கு முக்கியமான காரணம், பாரீஸ் நகருக்குள் காற்று அதிகமாக மாசுபட்டு வருவதுதான். மேலும் காற்று மாசுபாட்டை சமாளிக்க இதே போன்ற நடவடிக்கைகளை லியோன் மற்றும் விளர்பென் போன்ற நகரங்களிலும் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை போன்றே இந்தியாவில் டெல்லியில் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட புகை அதிகம் வராத கார்களிலேயே இரட்டை இலக்க எண்கள் கொண்ட கார்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. ஒற்றை இலக்க எண்கள் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இரட்டை இலக்கம் கொண்ட கார்களிலும் 'கார்ஃபூலிங்' சேவைகளை கொண்ட கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 'கார்ஃபூலிங்' சேவை என்பது உதாரணமாக ஐந்து பேர் அமரக்கூடிய கார்களில் டிரைவருடன் சேர்த்து கட்டாயம் ஐந்து நபர்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்படி ஐந்து பேருக்கு கீழ் அமர்ந்திருந்தால் காரானது நகருக்குள் அனுமதிக்கப்படாது. இந்த நெறிமுறைகளை கடைபிடிப்பதனால் வாகனங்களால் காற்றும், சுற்றுப்புறமும் மாசடைவது ஓரளவு தடுக்கப்படும் என்பது பாரிஸ் நகர அதிகாரிகளின் திட்டம். இந்த திட்டங்களை மீறி உள்ளே நுழையும் வாகனங்களுக்கு 38 டாலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு மூன்று நாட்களில் இதுவரை 1700 கார்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு காரணம், கடந்த சில நாட்களாக பாரீஸ் நகருக்குள் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அதிகபட்ச அளவான 80 மைக்ரோகிராம் அளவினை தாண்டி 91 மைக்ரோகிராம் அளவாக அதிகரித்தது. இது நடைமுறை செய்யப்பட்டால் மாசுபடும் காற்றின் அளவு படிப்படியாக குறையும் வாய்ப்பு உண்டு. கடந்த 20 வருடத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது நான்காவது முறையாகும். இந்த மாற்றுப் போக்குவரத்தானது பாரீஸ் நகருக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு வருடங்களிலும், இந்த முறைதான் பல நாட்களாக இத்திட்டம் தொடர்கிறது. இதை பற்றி பேசிய அதிகாரி ஏர்பாரீப், 'கடந்த புதன்கிழமை இப்போக்குவரத்துத் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது பல டிரைவர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால், அதன்பிறகு நிலைமை சீரடைந்து தற்போது போக்குவரத்து இயல்பாக இருக்கிறது. மேலும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பைக்குகள் மற்றும் மின்சார கார்களும் அதே சமையத்தில் மெட்ரோ மற்றும் பேருந்து போக்குவரத்தும் வியாழக்கிழமை (நேற்று) இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலைமை ஏற்படுவதற்கு மாசுக்களின் அதிகமான திரட்சியே காரணம்' என்கிறார். பாரீஸ் நகர ஹால் நிறுவனமானது 'இந்த காற்று மாசுபாடானது குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும்' என்று எச்சரிக்கிறது.

பாரிஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ 2025-ம் ஆண்டில் மூன்று முக்கிய நகரங்கள் இணைந்து அனைத்து டீசல் கார்களை தடை செய்யப்போவதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும், "இந்த காற்று மாசுபாட்டல் பல சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நடவடிக்கைக்கு கார் மற்றும் பஸ் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் சாத்தியம்" என்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.