Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

அடுத்த பொதுச்செயலாளர் யார்?- அதிமுக பொதுக்குழு 29-ம் தேதி கூடுகிறது


அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு டிசம்பர் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத் தில் நடக்கிறது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.

அதிமுகவின் பொதுச்செய லாளராகவும், தமிழக முதல்வராக வும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்றிரவே, அதிமுக எம்எல்ஏக் கள் கூடி, சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல் வத்தை தேர்வு செய்தனர்.

இதற்கிடையே, பொதுச்செய லாளர் மட்டுமின்றி சசிகலா தமிழக முதல்வராகவும் வரவேண்டும் என்ற கோரிக்கை அமைச்சர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங் கள், அமைப்புகள் சசிகலாவை சந்திக்கும் போது, பொதுச் செயலாளர், முதல்வர் பதவிகளுக் கும் அவர் வரவேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையில், இந்தாண்டு இறுதிக்குள் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அக்கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக அறிவிக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவி்த்தன. ஒருவேளை சசிகலா, தான் பொதுச்செயலாளராக விரும் பாவிட்டால், டி.டி.வி.தினகரனை பொதுச்செயலாளராகக்க தி்ட்ட மிட்டுள்ளதாகவும் அந்த வட் டாரங்கள் தெரிவித்தன.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அதிமுக மாவட்ட செய லாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கி னார்.

அதில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம், டிசம்பர் 29-ம் தேதி, காலை 9.30 மணிக்கு வானகரம், ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.