Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

வானிலை முன்னறிவிப்பு: சில இடங்களில் கனமழை வாய்ப்பு


லட்சத்தீவு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஸ்டெல்லா சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

"உள் தமிழகத்தில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவு மற்றும் அதைனை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

சென்னையை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:

சுமத்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருப்பதால், அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதனைத் தொடர்ந்து வரும் 48 மணி நேரத்தில் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்" என்றார் ஸ்டெல்லா.

சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, விருதுநகர், காஞ்சிபுரம் மாவட்டம் கொலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சென்னை விமான நிலையம், சிவகாசி, திருபுவனம், திருத்தணி,மேட்டுப்பட்டி, திருமங்களம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ, செம்பரம்பாக்கம், விரிஞ்சிபுரம், பூந்தமல்லியில் தலா 6 செ.மீ, வேலூர், பரமக்குடி ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ, செய்யாறு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளன.

முன்னதாக, தமிழகத்தை அச்சுறுத்திய நாடா புயல் வலுவிழந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. நிலப்பகுதிக்கு வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுவிழந்து போகாமல், காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நீடித்துக்கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.