Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

காஷ்மீர் தொடரும் அநியாய படுகொலை தொடரும் போராட்டம்!


காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் இந்த சூழலிலும் தொடர் மின்வெட்டு நிகழ்கிறது,

இந்த தொடர் மின்வெட்டை கண்டித்து காஷ்மீர் மக்கள் Shopian-Pulwama பகுதி வழிச்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

இன்று அதிகாலையிலிருந்து காஷ்மீரின் Zablipora , Lassipora  மற்றும் Tujjar Sharief பகுதிகளில் இந்திய இராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது,
இந்திய இராணுவம் தேடுதல் வேட்டையை நடத்தும் இந்த பகுதிகளிலெல்லாம்  துப்பாக்கி சுடும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக காத்திருந்த  Aamir Ahmad Bhat மற்றும் Waseem Ahmad Malik என்னும் இரண்டு இலைஞர்களை எந்த காரணங்களும் சொல்லாமல் ஜம்மு காஷ்மீர் அரசு கைது செய்துள்ளது.


Bandipora  மாவட்டத்தின் Ashtangoo  பகுதியில் உள்ள  Bashir Ahmed Sheikh  என்பவர் அடையாளம் தெரியாத நபரால் இன்று சுடப்பட்டுள்ளார்,
உடனடியாக மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் இயங்காத நிலையில் இப்போது ஜம்மு காஷ்மீர் அரசு கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு அட்டவனையை வெளியிட்டுள்ளது,
பாடங்கள் நடத்தப்படாத இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் அரசு இப்போது தேர்வை அறிவித்துள்ளதை கண்டித்தும் ,
தேர்விற்கான பாட திட்டங்களில் மாற்றங்கள் கோரியும் இன்று கல்லூரி மாணவர்கள் போராட்டடம் நடத்தினர்.

இன்று Anantnag மற்றும் kulgam மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டதட்ட 5 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
( இந்த தீ விபத்தும் எப்படி ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை )

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.